நேபாள பிரதமர் சர்மா ஒலி, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தோல்வி அடைந்துள்ளார்.
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை அடுத்து கடும் அரசியல் குழப்பங்கள், நிலவி வருகிறது.
பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தமால் பிரசந்தா இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி, பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதியிடம் பரிந்துரைத்திருந்தார்.
இதற்கமைய நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்த போதும், அந்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில் பங்கேற்ற 232 உறுப்பினர்களில், 93 பேர் பிரதமர் சர்மா ஒலிக்கு ஆதரவாகவும், 124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதனால் பெரும்பான்மை பலம் இல்லாமல், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஒலி தோல்வியடைந்துள்ளார்.





