நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாகிஸ்தானில் ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நோன்புப் பெருநாள் முடிவடையும் வரை ஒன்பது நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத்துறை சார்ந்த இடங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.