மாலைத்தீவில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் வீட்டுக்கு வெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாடு அவரது உடல் நிலை சீராக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டு தாக்குதலில் பிரித்தானிய பிரஜை ஒருவர் உட்பட மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் ஊடாக தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 32 வயதுகளை உடைய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது