மியான்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், துணை ஜனாதிபதி மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தலைமறைவாகியுள்ளதுடன், மியான்மர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் குழு மியான்மரின் நிழல் அரசாக செயற்பட்டு வருகின்ற நிலையில், மியான்மர் இராணுவம் இவர்களை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இராணுவம் எச்சரித்துள்ளது.
அத்துடன், முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகவும், அறிவித்துள்ளது.