வன்கூவர் வானூர்தி நிலையத்தின் புறப்படுகை முனைத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக றிச்மன்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது, அதிகாரிகள் தடுத்தனர் என்றும், எனினும் அவர்கள் வாகனத்தில் தப்பிச் சென்று விட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வானூர்தி நிலையம் அமைந்துள்ள றிச்மன்ட் தீவுக்கான அனைத்து பாலங்களையும் மூடிய காவல்துறையினர்,தொடருந்து சேவையையும் இடைநிறுத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை தேடுவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் எத்தனை பேரைத் தேடுகின்றனர் என்ற விபரத்தை வெளியிடவில்லை.