‘நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவு’ என்ற பெயரில் காவல்துறை விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையின் 16 சிப்பாய்கள் இந்த பிரிவில் உள்ளடங்குகின்றனர்.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பிலான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தினர், இந்த பிரிவுக்கு அனுசரணை வழங்குகின்றனர்.