வெளிநாடுகளில் உள்ள கனடியர்களில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற விபரங்கள் பொதுசுகாதாரத் துறையினரிடத்தில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி தொலைக்காட்சி மேற்கொண்ட செய்தி அறிக்கையின்போது, பொதுசுகாதாரத்துறையினரிடத்தில் இவ்விடயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளது.
எனினும், உடனடியாக அந்த வினாவுக்கான பதில் வழங்க முடியாது என்றும் தற்போது வரையில் அதுகுறித்த தரவுகள் எவையும் இல்லை என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கையிடலின்போது, இந்த தரவுகள் கட்டாயமாக உள்ளீர்க்கப்பட வேண்டும் என்றும் அப்போது வெளிநாடுகளில் இருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.