இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் (NET PRICE) கூறுகையில், ‘ஜெருசலெமில் பாலஸ்தீனர்களின் வன்முறைக்கு பின்னர் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இவை சண்டையை மேலும் தீவிரப்படுத்தலாம்’ என கூறினார்.
இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதி காக்கும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.