ரொறன்ரோ புறநகரப் பகுதியில் உள்ள வணிக கட்டடம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடிய சம்பவம் தொடர்பாக 24பேர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
Spadina Avenueவுக்கு கிழக்கே, இருந்து, ஞாயிறு அதிகாலை 1.27 மணியளவில் மோதல் ஒன்று தொடர்பாக காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் அங்கு சென்ற போது அதிக இரைச்சலுடன் இசையையும், அதிகளவானோர் கூடியிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
இதையடுத்து, கொவிட் 19 நடவடிக்கை பிரிவினர் உதவிக்கு அழைக்கப்பட்டு, முககவசங்களை அணியாமல் கேளிக்கை நிகழ்வில் பங்கேற்றிருந்த சுமார் 150 பேர் சுற்றிவளைக்கப்பட்டனர்.
அவர்களில் பலர் தப்பிச் சென்ற நிலையில், 24 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 13 ஆயிரம் டொலர் பெறுமதியான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.