அன்னையர் தினத்தன்று 32 வயதுடைய கனேடியப் பெண் ஒருவர் ஒட்டாவாவில், வீடு ஒன்றுக்குள் நுழைந்து, கரடியை விரட்டும் தெளிப்பானை விசிறி விட்டு, பிறந்து 8 நாட்களேயான குழந்தையை தூக்கிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அயலவர்கள் அந்தப் பெண்ணை துரத்திச் சென்று பிடித்து, குழந்தையை மீட்டு பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
கியூபெக்கை சேர்ந்த குறித்த பெண்ணுக்கு எதிராக, தீங்கிழைக்கும் பொருளை பயன்படுத்தியது, ஆயுதத்தினால் தாக்கியது, குழந்தையைக் கடத்தியது என குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் முயற்சியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.