மலேசியாவில் நாடு தழுவிய ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் அதிக வீரியத்தன்மையுடன் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு முழுமையாக நாடு முடக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருந்த நிலையில், மக்கள் ஒன்றுகூடல்களைத் தடுப்பதற்காகவும் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் முஹ்யிடீன் யாசின் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய வணிக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.