கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் வரை, வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவை நீடிக்க வேண்டும் என்று ரொறன்ரோ சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகரத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கு முடக்கலை நீடித்தால், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 400 ஆகக் குறையும் என்று ரொறன்ரோவின் சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் எலீன் டி வில்லா (Eileen de Villa) தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தங்குமிட உத்தரவு மே 20 ஆம் நாள் காலாவதியாகும் போது, நகரத்தை திறந்து விட்டால், புதிய தொற்றுகள், தொடர்ந்து 800 ஐ சுற்றி வரும் என்றும், இது நகரத்தை நான்காவது அலைக்குள் தள்ளும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் என்று மாகாண அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.