அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு உணவு மற்றும் மருந்தக நிர்வாகத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் நிலையை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் இது முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரையில் 260 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.