முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
B.1.617 என்ற கொரோனா மாறுபாடு கடந்த அக்டோபர் மாதம் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் உள்ள 44 நாடுகளிலிருந்து அனைவரும் அணுகக்கூடிய தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 4 ஆயிரத்து 500 இக்கும் மேற்பட்ட மாதிரிகளில் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக ஐ.நா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.