ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுதலை செய்ய வேண்டும் என 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பின்னர், 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும், முடிவெடுக்கப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
எனினும், ஆளுநர் பன்வாரிலால் இதற்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஜனாதிபதியை முடிவெடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சுக்கு ஜனவரியில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை சட்டவாளர் சண்டமுகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.