நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி பித்யா பண்டாரி காலக்கெடு விதித்துள்ளார்.
நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிரதமர் சர்மா ஒலி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ள நிலையில், நேபாளத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கான ஆலோசனையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.
ஆட்சி அமைக்க தகுதி உள்ள கட்சிகள், வரும் 13ம் நாளுக்குள், ஜனாதிபதியை சந்தித்து உரிமை கோர வேண்டும்.
யாரும் உரிமை கோராவிட்டால், அரசியல் சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுப்பார் என்று ஜனாதிபதி செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.