முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுச் சுடரேற்றி நிறைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொரோனா தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு, நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.