யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
யாழ்.மாவட்டத்தில் 35 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் பூவரசம் குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது ” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.