ஒன்ராறியோவில் தற்போது நடைமுறையில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்ராறியோவில் கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.
நேற்று 2 ஆயிரத்து 73 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மே 20ஆம் நாளுடன், தற்போதைய வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு காலாவதியாகவுள்ளது.
எனினும், இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் மாகாண அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, நாளாந்த தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைய வேண்டும் என்று ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.