வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுவரும் கணிப்புகள் “பெரும்பாலான நேரம்” துல்லியமானது என ஒப்புக் கொள்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
எனினும் இந்த கடுமையான விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நாடு தொடர்ந்தும் 2ஆயிரத்துக்கும் அதிகமான தினசரி தொற்று எண்ணிக்கையை பதிவு செய்தால், இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.