வகுப்பறைகளின் ஆசிய வெறுப்புணர்வைக் கையாளுவதற்கு, ஒன்ராறியோ அரசாங்கம் 3 இலட்சத்து 40 ஆயிரம் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
கொரோனா தொற்று, கனடாவில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வு குற்றங்களைத் தூண்டியுள்ளது என்று ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாணவர்களை ஒருமித்த சூழலில் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஒன்ராறியோ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதியின் ஒரு பகுதி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மனநல உதவிகளுக்காக பகிரப்படும் என்றும் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது