நான்கு ஆண்டுகளாக குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்காக போராடி வரும் ஒரு தம்பதியர், அது தொடர்பாக இந்தியா சென்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனடா திரும்ப முடியாமல் தவித்துவருகிறார்கள்.
ரொரன்றோவைச் சேர்ந்த ஹரி கோபால் கார்கும் (Hari Gopal Garg) அவரது மனைவி கோமல் கார்கும் (Komal Garg) 14 மாதக் குழந்தை ஒன்றை தத்தெடுப்பதற்காக மார்ச் மாதம் இந்தியா சென்றார்கள்.
அவர்கள் மீண்டும் கனடாவுக்கு பயணிப்பதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்தது.
இதனால் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற முடியாது தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.