ஒன்ராரியோவில் தற்போது அமுலாக்கப்பட்டிருக்கும் வீட்டில் இருக்கும் முடக்க நிலைமையானது எதிர்வரும் மே 20ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வேண்டும் என்று ஒன்ராரியோ மருத்துவர்கள் சங்கம் கோரியுள்ளது.
மாகாண அரசாங்கம் இந்த விடயத்தில் சடுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது உருமாறிய கொரோனா தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலையில் அவ்விதமான ஆபத்துக்களை தவிர்ப்பதற்கு காணப்படுகின்ற ஒரே தெரிவு முடக்க நிலையே என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.