கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் இரண்டு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பயணக்கப்பட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
அத்துடன் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத்தடையும் விதிக்கப்படவுள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாடானது இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாளை இரவு 11 மணிக்கு அமுலாகும் நடமாட்டக்கட்டுப்பாடானது, எதிர்வரும் 17ம் திகதி அதிகாலை 04 மணி வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் நடமாட்டங்களுக்கு தடைவிதிக்கப்படும்.
குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.