கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா தடுப்பு குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும்.
இதில் ஒவ்வொரு கட்சியிலும் தலா 2 உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.” என்றும், அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.