நேபாளத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, நேபாள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
நேபாள நாடாளுமன்றத்தில், கடந்த, 10ம் திகதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் சர்மா ஒலி அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, ஆட்சி அமைக்க தகுதி உள்ள கட்சிகள், 13ம் திகதிக்குள், உரிமை கோர வேண்டும் என, ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், ஆட்சி அமைக்க, ஜனாதிபதியிடம் உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
271 உறுப்பினர்கள் அடங்கிய நேபாள நாடாளுமன்றத்தில் 61 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் கட்சிக்கு, 49 உறுப்பினர்களைக் கொண்டிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும், 32 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள ஜனதா சமாஜ்வாதி கட்சியும் ஆதரவு அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.