மட்டக்களப்பில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல்களின்றி, நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தங்களது வீடுகளிலேயே விளக்கேற்றி அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கான நீதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவே கிடைக்க வேண்டும்.
வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை, நினைவுகூருவதன் ஊடாகவே நீதியை எம்மால் பெற முடியும்.“ என்று தெரிவித்துள்ளார்.