முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான நிலையில் வல்வெட்டித்துறையில் அவர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது புலனாய்வாளர்களும், படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர்.
எனினும், சிவாஜிலிங்கம் அவர்களை பொருட்டாக கொள்ளாது தனது நினைவேந்தலை முன்னெடுத்ததோடு தொடர்ச்சியாக இனவழிப்பு நிகழ்ந்த பகுதிகளில் இவ்வாரம் முழுவதும் நினைவேந்தலைச் செய்து இறுதியாக மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தனது இறுதி அஞ்சலியைச் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.