ரொறன்ரோவில், Rexdale பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ள போதும் அங்கிருந்த இரண்டு முதியவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.
Humberwood Boulevad, அருகே அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு படையினர் பெரும் சுவாலை மற்றும், கரும்புகையுடன்,எரியும் நெருப்பை அணைக்க கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தாமும் 91 வயதுடைய கணவனும் வீட்டுக்குள் இரந்த போதே பாரிய தீ ஏற்பட்டதாக, அங்கிருந்து உயிர் தப்பி வெளியே வந்த 86 வயதுடைய மூதாட்டி தெரிவித்துள்ளார்.