தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்தி செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இதனையடுத்து நேநள்ளிரவு முதல் பிராணவாயு உற்பத்தி ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் ஸ்டெர்லைட் ஆலையில் உருவாக்கப்பட்ட பிராணவாயு அடங்கிய 4.80 தொன் அளவிலான தாங்கி ஊர்தி இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவமனைகள் நோக்கி பயணமாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், பல மாநிலங்களில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் ஏராளாமான மக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை பிரணவாயு பற்றாக்குறையால் பெருமளவானோர் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.