இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார்.
தகவல் பாதுகாப்புத் துறையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை (Elizabeta Belloni) தேர்வு செய்வதாக பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) அறிவித்தார்.
இரகசிய சேவைகள் திணைக்களம், நாட்டின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உளவுத்துறையை மேற்பார்வையிடுகிறது மற்றும் இத்தாலிய அரசாங்கத்திற்கு நேரடியாக அறிக்கை செய்கிறது.
63 வயதான பெல்லோனியின் நியமனத்தை லீக் கட்சித் தலைவர் மேட்டியோ சால்வினி (Matteo Salvini) உள்ளிட்ட இத்தாலிய அரசியல்வாதிகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.