ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டுவதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காசா மற்றும் இஸ்ரேல் நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்காக, இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு நோர்வே, துனிசியா, சீனா ஆகிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
எனினும், இந்த கூட்டத்தை கூட்டுவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.