ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 759 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி 37 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை, அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணும் வீதம் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுசுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அத்துறை கூறியுள்ளது.