கொங்கோவில் அண்மையில் தொடங்கியுள்ள மோதல்களை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்வதாக ஏஎவ்பி செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்பகுதியில் உள்ள, புருண்டி எல்லையில் புதன்கிழமை மோதல்கள் வெடித்துள்ளன.
பிலோசே பிஸாம்புகே (Biloze Bishambuke) என்ற உள்ளூர், போராளிக் குழுவுக்கும், கொங்கோவின் துட்சி இன போராளிக் குழுவுக்கும் இடையிலேயே இந்த மோதல்கள் மூண்டுள்ளன.
இன்றும் மோதல்கள் தொடர்வதாக போராளிக் குழுவொன்றின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து, 5 ஆயிரம் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோதல்கள் நடக்கும் இரண்டு மாகாணங்களையும், தனியாக முற்றுகையிடுமாறு நாட்டின் ஜனாதிபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.