கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35ஆயிரம் 776 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அறிகுறி இல்லாமல் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை தங்க வைப்பதற்கு 9 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 3 நிலையங்களும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு நிலையங்களும் இயங்கவுள்ளன