கொவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மருந்தளவிற்கும் இரண்டாவது மருந்தளவிற்கும் இடையிலான கால அளவை 16 வாரங்களாக நீடித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது மருந்தளவிற்கும் இடையில் 12 முதல் 16 வாரங்கள் நீட்டிக்கலாம் என வைத்தியர் என்.கே. ஆரோரா தலைமையிலான பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தற்போது இந்த இடைவெளி 6-8 வாரங்களாக உள்ளது. இங்கிலாந்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கொவிஷீல்டு தடுப்பூசியின் 2 மருந்தளவிற்கும் இடையேயான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்குழுவின் பரிந்துரை யை 12 ஆம் திகதி நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் கூடிய தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.