சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை – தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைகளுக்கு அருகில் தாழ்நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, இங்கிரிய, மத்துகம மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை முற்பகல் 11 மணிவரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஹொரன, களுத்துறை, பேருவளை, மில்லனிய, மதுரவல, பாணந்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.