சிறிலங்கா முழுவதிலும் அதிகாரபூர்வமற்ற 3 நாள் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், நாடெங்கும் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு தொடக்கம் இறுக்கமான பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வரும் திங்கள் அதிகாலை 4 மணி வரை இந்த பயணத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமற்ற ஊரடங்கு போன்று நடைமுறைப்படுத்தப்படும், இந்தப் பயணக் கட்டுப்பாட்டினால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், போக்குவரத்துகள் முற்றாக முடங்கியுள்ளதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
வீதிகளில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் மட்டும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.