சிலாபம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றுக்கு படகில் புறப்படவிருந்த 30 பேரைக் கைது செய்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று சிறிலங்கா கடற்படையும், கடலோரக் காவல்படையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பயணத்துக்கான ஒழுங்குகளைச் செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.