கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்றும், அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என்றும் அமெரிக்க கூறியுள்ளது.
எனினும், உள்ளூர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகளில், முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருந்தாலு, அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
“நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் முக கவசம் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு எமக்குக் காட்டியுள்ளது.
எனவே நிலைமை மோசமானால், இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது” என்றும், அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.