தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பெரும்பாளான மக்கள் கொரோனா தொற்றுகான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு நோயாளர் காவு வண்டிகளில் காத்திருக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுவதாகவும், ஒக்சிஜன் கிடைக்கப்பெறாமல் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் முவ்வாயிரம் படுக்கை அறைகளை கொண்ட ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் ஆயிரத்து 618 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 250 படுக்கைகளுக்கே ஒக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் ஒக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளர்கள், நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டி துர்ப்பாக்கிய நிலைமை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.