மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
வல்வெட்டித்துறை, வேம்படியைச் சேர்ந்த 68 வயதுடைய மோகனதாஸ் பிறேமாவதி மற்றும் அவரது மகனான, 32 வயதுடைய மோகனதாஸ் திலீபன் ஆகிய இருவருமே விபத்தில் காயமடைந்த நிலையில், மரணமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபடுவதற்காக, மகிழுந்தில் பயணித்த போது, மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில், குறித்த தாயும் மகனும் மேலும் ஐந்து பேரும், காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.