ரொறன்ரோ காவல்துறை வாகனம் ஒன்று Etobicoke பகுதியில் உந்துருளி ஒன்றுடன் மோதிய விபத்தில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்றுஇரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த 30 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Sixth Street இற்கும் Birmingham Street,இற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காவல்துறையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையின் சிறப்பு பிரிவு விசாரணைகளை தொடங்கியுள்ளது.