வியன்னாவில் உள்ள அரசாங்க கட்டடங்களில் இஸ்ரேலியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததை அடுத்து, ஒஸ்ரியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ரத்துச் செய்துள்ளார்.
ஒஸ்ரிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலன் பேர்க்குடன், (Alexander Schallenberg) ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் (Mohammad Javad Zarif) பேச்சுக்களை நடத்திய போதும், வியன்னாவுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஒஸ்ரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய மோதல்களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அரசு கட்டடங்களில் இஸ்ரேலிய கொடிகளை ஏற்றுமாறு ஒஸ்ரிய ஜனாதிபதி செபஸ்ரியன் குரூஸ், வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.