ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய உறவு கொண்ட இவர்கள் இருவருடன் ஜனாதிபதி தேர்தலில் 300 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட அனுமதி கோரியுள்ளனர்.
இந்நிலையில் 300 மேற்பட்ட வேட்பாளர்கள் குறித்து 12 இறையியலாளர்கள் மற்றும் நீதிபதிகள் கொண்ட சபை இறுதி முடிவை அறிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2017 தேர்தலுக்கு அனுமதி கோரிய ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 6 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.