சிறிலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுலாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித பேரவையினால் அவதானிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குருந்தூர் மலைப்பகுதியில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில், இந்த வழக்கு, தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.