இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து அமெரிக்கா மீதும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “வருந்தத்தக்கது, சபை இதுவரை ஒரு உடன்பாட்டை எட்டத் தவறிவிட்டது, அமெரிக்கா சர்வதேச நீதிக்கு எதிர் பக்கத்தில் நிற்கிறது” என குற்றம் சாட்டினார்.