அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார கவனிப்பு, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அறிகுறிகள் வெளிப்படாத, கொரோனா தொற்றாளர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டம் நாளை திங்கட்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
எனினும், தொற்று நிலைமை தீவிரமாக உள்ளவர்கள் மற்றும், வேறுபல நோய்களைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரும் எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படுவார்கள் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.