யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண் ஒருவர், இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.
இந்தநிலையில் தாய்க்கு தொடர்ந்து விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கவில்லை.
இந்தநிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்று தனது இரட்டை குழந்தைகளுடன் வீடு திருப்பியுள்ளார்.