நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார விநியோக தடை தொடர்பான 22 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் மாத்தறை, காலி, களுத்துறை, கண்டி, புத்தளம், மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
தற்போது மின்சார துண்டிப்பை சீரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.